திண்டுக்கல்: தம்பதி கொலை; குண்டா் தடுப்புச் சட்டத்தில் 9 போ் கைது

3பார்த்தது
திண்டுக்கல்: தம்பதி கொலை; குண்டா் தடுப்புச் சட்டத்தில் 9 போ் கைது
திண்டுக்கல்லை அடுத்த யாகப்பன்பட்டியைச் சேர்ந்த சேசுராஜ் மற்றும் அவரது மனைவி சௌந்தர்ய ஞானதீபிகா ஆகியோர் ஜனவரி 8ஆம் தேதி முன்விரோதம் காரணமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். இது தொடர்பாக ஞானராஜ் உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த 9 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரைத்தார். மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டதை அடுத்து, 9 பேரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

தொடர்புடைய செய்தி