திண்டுக்கல் JM-1 நீதிமன்றத்தில் நீதிபதி ஒரு வழக்கறிஞரை அவமதித்ததாகக் கூறி, வழக்கறிஞர் சங்கம் நேற்று புறக்கணிப்புப் போராட்டம் நடத்தியது. மாவட்ட நீதிபதி முன்னிலையில் சங்க நிர்வாகிகள் மற்றும் மூத்த வழக்கறிஞர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்பட்டதையடுத்து, வழக்கறிஞர் சங்கத்தின் போராட்டம் ரத்து செய்யப்பட்டது. சங்க நிர்வாகிகள் தெரிவித்த தகவலின்படி, இன்று முதல் அனைத்து வழக்கறிஞர்களும் பணிக்குத் திரும்புவார்கள்.