திண்டுக்கல் மலைக்கோட்டை அடிவாரத்தில் அமைந்துள்ள பத்ரகாளியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா முன்னிட்டு கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த பூக்குழியில் இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து 100க்கும் மேற்பட்டபக்தர்கள் பரவசத்துடன் பூக்குழி இறங்கி வழிபாடு செய்தனர். இதனை காண திண்டுக்கல் திண்டுக்கல் நகரின் பல்வேறு இருந்த ஏராளமான பக்தர்கள் அங்கு குவிந்தனர்.