திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக தினமும் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. இன்று (பிப். 12) வாகனம் ஓட்டும் போது பக்கவாட்டு கண்ணாடியை கவனித்து வாகனம் ஓட்டுவோம், விபத்தை தவிர்ப்போம் என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படத்தை காவல் துறை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இது சாலைப் பாதுகாப்பை வலியுறுத்தும் ஒரு முக்கிய அறிவிப்பாகும்.