திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாம்பழத்திற்கு நியாயமான கொள்முதல் விலை, அனைத்து விவசாயிகளுக்கும் பயிர்க்கடன் தள்ளுபடி, உரம் மற்றும் நீர் வசதி போன்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. மேலும், குளங்கள் ஆக்கிரமிப்பு அகற்றவும், குடிநீர் தட்டுப்பாடு தீர்க்கவும் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது. இக்கூட்டத்தில் மொத்தம் 73 மனுக்கள் பெறப்பட்டன.