திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீா் கூட்டத்தில், மனு எழுதிக் கொடுப்பதாகக் கூறி சிலர் அதிகப்பணம் வசூலிப்பதாகப் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனா். ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட மனு எழுத்தர்கள், தற்போது மேம்பாலத்துக்கு அடியிலும், அணுகு சாலையிலும் அமர்ந்து பொதுமக்களை ஏமாற்றுவதாகக் கூறப்படுகிறது. மனு எழுத்தர்கள் ஒரு மனுவுக்கு ரூ.1000 வரை வசூலிப்பதாகப் புகார்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.