மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் வைகை அணை தனது முழு கொள்ளளவை நெருங்கியுள்ளது. இன்று முதல் 5 நாட்களுக்கு அணையில் இருந்து நீர் திறக்கப்படுவதால், தேனி, சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.