திண்டுக்கல்: பெண்களுக்கு இனிப்பான செய்தி.. அமைச்சர் ஐ.பெரியசாமி

0பார்த்தது
திண்டுக்கல்: பெண்களுக்கு இனிப்பான செய்தி.. அமைச்சர் ஐ.பெரியசாமி
பொங்கல் பண்டிகை முடிவதற்குள் பெண்களுக்கு ஒரு இனிப்பான செய்தி வரும் என அமைச்சர் ஐ. பெரியசாமி தெரிவித்துள்ளார். தற்போது 1.37 கோடி பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 மகளிர் உரிமைத்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. திண்டுக்கல்லில் அமைச்சர் கூறிய இந்த தகவல், மகளிர் உரிமைத்தொகை உயர்த்தப்படலாம் என்ற எதிர்பார்ப்பை மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது. ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக உள்ள ஐ. பெரியசாமி, சுயஉதவி குழுக்கள் மற்றும் கடன் திட்டங்கள் போன்ற துறைகளையும் கவனித்து வருகிறார். இதனால், அவரது அறிவிப்பு பெண்கள் மத்தியில் பெரும் ஆர்வத்தை தூண்டியுள்ளது.

தொடர்புடைய செய்தி