திண்டுக்கல்: கிராம சபைக் கூட்டம் மாற்றம்

81பார்த்தது
திண்டுக்கல்: கிராம சபைக் கூட்டம் மாற்றம்
திண்டுக்கல் மாவட்டத்தில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும், உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு கிராம சபைக் கூட்டம் 23.03.2025 அன்று முற்பகல் 11.00 மணி அளவில் நடைபெற இருந்தது, நிர்வாக காரணங்களினால் மேற்கண்ட கிராம சபைக் கூட்டம் 29.03.2025 (சனிக்கிழமை) அன்று முற்பகல் 11.00 மணிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

உலக தண்ணீர் தினத்தின் கருப்பொருளினைப் பற்றி விவாதித்தல், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, சுத்தமான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்வது குறித்து விவாதித்தல், கலைஞர் கனவு இல்லம் 2025-2026 பயனாளிகள் பட்டியல் ஒப்புதல் பெறுதல் உள்ளிட்ட பொருள்கள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது. 

எனவே, திண்டுக்கல் மாவட்டத்தில் அனைத்து கிராம ஊராட்சிப் பகுதியில் உள்ள பொதுமக்கள் தங்கள் பகுதியில் நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களில் தவறாது கலந்து கொண்டு விவாதத்தில் தங்களது கருத்துக்களை தெரிவித்து பயன்பெறலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி