*அமுல் கார்ப்பரேட் நிறுவனம் போல் செயல்படுகிறது. ஆவின் பால் விவசாயிகளையும் பால் விற்பனையையும் சமநிலையில் வைக்கும் நிலையில் உள்ளது - அமைச்சர் மனோ தங்கராஜ்*
*தமிழகத்தில் ஆவின் நிறுவனம் வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது - அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி*
*மார்க்கெட்டில் ஆவின் பால் இருப்பதாலே பாலின் விலை உயராமல் உள்ளது - அமைச்சர் மனோ தங்கராஜ்*
*ஆவின் வியாபார நோக்கில் செயல்படவில்லை - அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி*
*ஆவினில் குளிரூட்டப்பட்டு முறையாக கொடுக்கிறோம். அதனை வாங்கிக் கொண்டு செல்லும் சிறு விற்பனையாளர்கள் அதனை குளிரூட்டப்பட்ட நிலையில் வைக்காமல் இருப்பதால் பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் ஆவினை குறை சொல்வது ஏற்கத்தக்கது அல்ல. - சென்னையில் மோர் குடித்ததால் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நபர் குறித்த கேள்விக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் பதில்*
தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் திண்டுக்கல் தொழிற்பேட்டையில் உள்ள மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
"ஆய்வின்போது அதிகாரிகளை செய்தியாளர்கள் இருக்கிறார்கள் என்று பார்க்க முடியாது. அனைவரும் முறையாக செயல்பட வேண்டும்" என அறிவித்த தெரிவித்தார்.