திண்டுக்கல் மாநகராட்சிக்குட்பட்ட ஆர்விநகர் 23வது வார்டில் உள்ள பத்ரகாளி அம்மன் திருக்கோவிலில் மார்கழி மாதம் 9ம் நாளை முன்னிட்டு இன்று (24.12.2024) விளக்கு திருவிளக்கு வழிபாடு மிகச் சிறப்பாக நடைபெற்றது. விளக்கு வழிபாட்டில் பத்ரகாளி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் தரிசனம் கொடுத்தார். விளக்கு வழிபாட்டில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு 108 நாமங்களை ஒலித்துப் பாடி அம்மனை தரிசனம் செய்தனர்.