திண்டுக்கல்: போலி குளிர்பானம் தயாரித்தவர் கைது

53பார்த்தது
திண்டுக்கல்: போலி குளிர்பானம் தயாரித்தவர் கைது
திண்டுக்கல் குட்டியபட்டி பகுதியில் ஈரோடு பகுதியைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தின் பெயரில் ஒரு எழுத்தை மட்டும் நுகர்வோர் எளிதில் அறிந்துகொள்ள முடியாத வகையில் போலியாக குளிர்பானம் தயாரிப்பதாக தனியார் நிறுவனத்தின் மேலாளர் குமரவேல் அளித்த புகாரின் பேரில் அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் குட்டியபட்டியில் போலியாக குளிர்பானம் தயாரித்த இடத்தில் திடீர் சோதனை மேற்கொண்டபோது போலியாக ஈரோடு சேர்ந்த நிறுவனத்தின் குளிர்பானங்களை தயாரித்து விற்பனை செய்வது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அறிவுசார் சொத்துரிமை அமலாக்கத்துறை அதிகாரிகள் போலியாக குளிர்பானம் தயாரித்த ஹரிஹரனை கைது செய்து அங்கிருந்து 2,340 குளிர்பான பாட்டில்கள், 46,500 ஸ்டிக்கர்கள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி