திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்த நபர் மனு அளிக்கும் இடத்திற்கு முன்புறம் உள்ள விளக்குகம்பத்தின் கீழ் அமர்ந்திருந்தார். அப்போது மரத்தின் மேல் உள்ள சிறிய கிளை உடைந்து விழுந்தது. மேலும் அவர் அமர்ந்திருந்த இடத்தில் இருந்து அவசரமாக எழுந்தபோது கல் புரண்டது. தடுமாறிய நபர் அப்பகுதியில் இருந்து உடனடியாக வெளியேறி உயிர் தப்பினார். இந்த நிகழ்வு அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.