திண்டுக்கல்: இஸ்ரேலுக்கு எதிராக ஆா்ப்பாட்டம்

68பார்த்தது
திண்டுக்கல்: இஸ்ரேலுக்கு எதிராக ஆா்ப்பாட்டம்
திண்டுக்கல் தலைமை தபால் நிலையம் முன் நடைபெற்ற இஸ்ரேலுக்கு ஆர்ப்பாட்டத்துக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் கே. பிரபாகரன் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம், மாநிலக் குழு உறுப்பினர் ஜி. ராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.திண்டுக்கல் தொகுதி மக்களவை உறுப்பினர் இரா. சச்சிதானந்தம் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டார்.ஆர்ப்பாட்டத்தின் போது, பாலஸ்தீனம் மேற்கு கரை பகுதியில் அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேலைக் கண்டித்தும், பாலஸ்தீன நாட்டின் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட பொதுமக்களைப் பாதுகாக்க உலக நாடுகள் முன்வர வேண்டும் என வலியுறுத்தியும் கட்சியினர் முழக்கமிட்டனர்.

தொடர்புடைய செய்தி