திண்டுக்கல் மாவட்டத்தில் சட்டவிரோத மணல் குவாரிகள் நடத்துபவர்களுடன் அதிகாரிகள் கூட்டு வைத்து ஊழல் செய்வதை மிகவும் தீவிர குற்றமாக பார்க்க வேண்டும் - உயர்நீதிமன்ற நீதிபதிகள் எச்சரிக்கை. சட்டவிரோதமாக மணல் திருட்டில் ஈடுபடுவதால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது மேலும் அரசிற்கு பெரும் வருவாய் இழப்பும் ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் ஏராளமான சட்டவிரோத கனிமவள குவாரிகள் நடத்தி வருகின்றனர். சட்டவிரோத மணல் குவாரிகளை மூடி சம்பந்தப்பட்ட நபர்கள் மீதும் அதிகாரிகள் மீதும் குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பான அறிக்கையை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசின் புவியியல் மற்றும் சுரங்கத்துறை செயலாளர், ஆணையர், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர், திண்டுக்கல் மாவட்ட கனிமத்துறையின் உதவி இயக்குனர் ஆகியோருக்கு உத்தரவு.