திண்டுக்கல்: மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

84பார்த்தது
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன் தலைமையில் நடைபெற்றது. இன்றைய கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 293 மனுக்கள் பெறப்பட்டன. 

பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி தகுதியான மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார். இன்றைய கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் பார்வைத்திறன் குறைபாடு உடைய 10 மாணவர்களுக்கு டெய்லி பிளேயர் தலா ரூ. 14,000 வீதம் ரூ. 1,40,000 மதிப்பீட்டிலும், 2 பயனாளிகளுக்கு கண்ணாடிகள் ரூ. 2,822 மதிப்பீட்டிலும், 2 பயனாளிகளுக்கு கைக்கடிகாரம் ரூ. 3,512 மதிப்பீட்டிலும், 2 நபர்களுக்கு மடக்கு குச்சிகள் ரூ. 6,066 மதிப்பீட்டில் என மொத்தம் ரூ. 1,52,400 மதிப்பீட்டிலான நலதிட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார். 

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயபாரதி, மாவட்ட வழங்கல் அலுவலர் அன்பழகன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) சிவக்குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் கோட்டைக்குமார், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் குணசேகரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வளர்ச்சி) சுந்தரமகாலிங்கம், தனித்துணை ஆட்சியர்(சமூக பாதுகாப்புத் திட்டம்) கங்காதேவி மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி