திண்டுக்கல்: போதை மாத்திரைகள் விற்பனை.. மருந்தக நிா்வாகி கைது

19பார்த்தது
திண்டுக்கல்: போதை மாத்திரைகள் விற்பனை.. மருந்தக நிா்வாகி கைது
திண்டுக்கல்லில் மருந்தகம் ஒன்றில் போதை தரும் வலி மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில், திண்டுக்கல் நகா் வடக்கு காவல் நிலைய போலீஸாா் மருந்து ஆய்வாளா் மகேஸ்வரன் உதவியோடு திங்கள்கிழமை இரவு சோதனை மேற்கொண்டனா். சோதனையின் போது, உரிய ஆவணங்கள் இன்றி அட்டவணைப்படுத்தப்பட்ட 17,737 மாத்திரைகள், மருந்துகளை கலக்கும் 293 ஆய்வகக் குப்பிகள், 20 ஊசிகள் பறிமுதல் செய்யப்பட்டன. மருந்தகத்தை நிா்வகித்து வந்த உரிமையாளரின் மகன் ஆரிப் அகமது கைது செய்யப்பட்டாா்.

தொடர்புடைய செய்தி