திண்டுக்கல் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக இருந்த சரித்திர பதிவேடு குற்றவாளிகள், போதைப்பொருள் விற்பனையாளர்களை கட்டுப்படுத்த காவல்துறை சிறப்பு அதிரடி சோதனை நடத்தியது. நேற்று நடைபெற்ற "ஸ்பெஷல் டிரைவ் ஆபரேஷன்" மூலம் மாவட்டம் முழுவதும் 94 பேர் கைது செய்யப்பட்டனர். பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தொடர்ந்து தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.