திண்டுக்கல்: ரூ.1.25 கோடி வரி நிலுவை

58பார்த்தது
திண்டுக்கல்: ரூ.1.25 கோடி வரி நிலுவை
திண்டுக்கல் மாநகராட்சிக்கு ரூ.1.25 கோடி வரி செலுத்தாமல் நிலுவை வைத்துள்ள அரசு அலுவலகங்கள், வரி வசூலுக்குச் செல்லும் பணியாளர்களை அலைக்கழித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. அலுவலகங்களிலிருந்து, ஏற்கெனவே உள்ள நிலுவைத் தொகை ரூ.1.36 கோடி, நிகழாண்டுக்கான ரூ.37.97 லட்சம் என மொத்தம் ரூ.1.74 கோடி மாநகராட்சிக்கு செலுத்தப்பட வேண்டும். இதில், நிலுவை ரூ.36.65 லட்சம், நிகழாண்டின் ரூ.12.90 லட்சம் என மொத்தம் ரூ.49.55 லட்சம் வசூலிக்கப்பட்டது. நிலுவை ரூ.1 கோடி, நிகழாண்டில் ரூ.25.07 லட்சம் என மொத்தம் ரூ.1.25 கோடி மேலும் வசூலிக்கப்பட வேண்டும். 

கடந்த ஆண்டு, மத்திய அரசின் ஊக்கத் தொகை ரூ.10 கோடியைப் பெற வேண்டும் என்பதற்காக, அரசு அலுவலகங்கள் செலுத்த வேண்டிய வரி நிலுவைத் தொகையில் குறிப்பிட்டத் தொகையை தமிழக அரசே செலுத்தியது. நிகழாண்டில் அதே நிலை பின்பற்றப்படாது என்றும், சம்பந்தப்பட்ட அலுவலகங்களே வரியை செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அரசுத் தரப்பில் ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இன்னும் 20 நாள்கள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில் வரி வசூலில் திண்டுக்கல் மாநகராட்சி இலக்கை எட்டுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
Job Suitcase

Jobs near you