திண்டுக்கல்: வளர்ச்சித் திட்டப் பணிகள் தொடர்பாக ஆய்வு

70பார்த்தது
திண்டுக்கல்: வளர்ச்சித் திட்டப் பணிகள் தொடர்பாக ஆய்வு
திண்டுக்கல் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் தொடர்பாக, மாநில கண்காணிப்பு அலுவலர் மற்றும் தமிழ்நாடு பசுமை எரிசக்திக் கழகம் நிர்வாக இயக்குநர் மரு. அனீஸ் சேகர் தலைமையில் மாவட்ட ஆட்சித் தலைவர் பூங்கொடி முன்னிலையில் அனைத்துத் துறை உயர்மட்ட அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. 

இக்கூட்டத்தில், குடிநீர் திட்டங்கள், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம், முதல்வரின் முகவரித் திட்டம், மக்களுடன் முதல்வர் திட்டங்களின் கீழ் மேற்கொள்ளப்பட்ட பணிகள், வழக்கிழந்த பருவமழை, பட்டா வழங்கப்பட்ட விபரங்கள், கலைஞரின் கனவு இல்லம், ஊரக வீடுகள் சீரமைப்புத் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டம், மக்களைத் தேடி மருத்துவம் திட்டம், சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள், பள்ளிக் கல்வித்துறையில் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள், புதுமைப்பெண் திட்டம், தமிழ்ப்புதல்வன் திட்டம், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள திட்டங்கள், முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மண்ணுயிர் காப்போம் திட்டம், நான் முதல்வன் திட்டம் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.