தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் திண்டுக்கல் மாவட்ட பிரிவு சார்பில் கோடை கால நீச்சல் பயிற்சி முகாம் 5 கட்டங்களாக நடைபெறுகிறது.
இதுதொடர்பாக திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவா கூறியதாவது: மாவட்ட விளையாட்டு அரங்கில் உள்ள நீச்சல் குளத்தில் பயிற்றுநர் மூலம் இந்த நீச்சல் பயிற்சி அளிக்கப்படுகிறது. மாணவ, மாணவிகளுக்கு காலை 7 முதல் 8 மணி வரை, 8 முதல் 9 மணி வரை, மாலை 4 முதல் 5 மணி வரை, 5 மணி முதல் 6 மணி வரையும், பெண்களுக்கு பிற்பகல் 1 முதல் 2 மணி வரை பயிற்சி அளிக்கப்படும். நீச்சல் பயிற்சியில் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படும். 12 நாள்கள் பயிற்சிக்கு நபருக்கு 18 சதவீத ஜிஎஸ்டி வரி உள்பட ரூ. 1,770 கட்டணம் வசூலிக்கப்படும். நாளொன்றுக்கு ஒரு மணி நேரம் மட்டும் நீச்சல் கற்றுக் கொள்ளலாம்.
நீச்சல் பயிற்சியில் சேர விரும்புவோர் நேரடியாகவோ அல்லது இணையதள முகவரி மூலமாகவோ பதிவு செய்து கொள்ளலாம். கட்டணத் தொகை பணமாக வசூலிக்கப்படமாட்டாது. எண்ம தொழில்நுட்ப முறையில் மட்டுமே கட்டணத் தொகைப் பெறப்படும். கூடுதல் விவரங்களுக்கு 7401703504 என்ற எண்ணில் மாவட்ட விளையாட்டு அலுவலரையும், பயிற்றுநரை 9677649197 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என்றார் அவர்.