திண்டுக்கல்: டாஸ்மாக் தொழிலாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம்

85பார்த்தது
திண்டுக்கல் தனியார் திருமண மண்டபத்தில் ஏ ஐ டி யு சி டாஸ்மார்க் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் மாநில செயற்குழு கூட்டம் மாநில தலைவர் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது. இதில் 22 ஆண்டுகள் பணி புரியும் டாஸ்மார்க் பணியாளர்களை காலமுறை ஓய்வூதியம் வழங்க வேண்டும், இஎஸ்ஐ மருத்துவ திட்டத்தில் இணைக்க வேண்டும், பணி பாதுகாப்பு வழங்கிட வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க வேண்டும் உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கை தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. திண்டுக்கல் மதுரை தேனி கரூர் சென்னை திருநெல்வேலி விருதுநகர் உள்ளிட்ட அனைத்து மாவட்ட மாநில நிர்வாகிகள் இந்த செயற்குழு கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி