திண்டுக்கல்: சாக்லேட் வழங்கிய ஆசிரியர்கள்

55பார்த்தது
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவடைந்த நிலையில் இன்று முதல் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக கல்வித்துறை அறிவித்தது. இதனையடுத்து பள்ளி வகுப்பறைகள், வளாகம், மற்றும் மைதானங்களை ஆசிரியர்கள் சுத்தம் செய்து தயார் நிலையில் வைத்திருந்தனர். இந்நிலையில் திண்டுக்கல் அடுத்துள்ள செட்டிநாயக்கன்பட்டி மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பெற்று வருகின்றனர். 

இப்பள்ளிக்கு செட்டிநாயக்கன்பட்டியை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து அந்த வழியாக செல்லக்கூடிய அரசு பேருந்தில் பள்ளி மாணவ மாணவிகள் நாள்தோறும் பள்ளிக்கு வருவது வழக்கம். இதனை அடுத்து பேருந்து நிறுத்தத்திற்கு சென்ற தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனருக்கு சால்வை அணிவித்து பரிசுகள் கொடுத்து கௌரவித்தனர். 

பின்னர் பேருந்தில் இருந்து இறங்கிய மாணவ மாணவிகளுக்கு தங்களது சொந்த செலவில் பேனா, பென்சில், சாக்லேட் மற்றும் ரோஜா பூ கொடுத்து வரவேற்று பள்ளிக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் பள்ளி வளாகத்தில் பிரார்த்தனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மாணவ மாணவிகளுக்கு பள்ளியில் அரசு இலவசமாக வழங்கிய நோட்டுப் புத்தகங்கள் வழங்கி வகுப்பறைகளுக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்புடைய செய்தி