திண்டுக்கல் நகர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராஜசேகர் தலைமையில் சார்புஆய்வாளர் சித்திக் மற்றும் காவலர்கள் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது சவேரியார்பாளையம் பகுதியில் உள்ள முட்புதரில் பட்டாசுகளுடன் பதுங்கியிருந்த அதே பகுதியைச் சேர்ந்த சகாயராஜ் மகன் அஜய்குமார் (27) என்பவர் போலீசாரைக் கண்டதும் தப்பிச் செல்ல முயன்றார். போலீசார் அவரைச் சுற்றிவளைத்துப் பிடித்து விசாரணை நடத்தி, அஜய்குமாரை கைது செய்து வழக்குப் பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.