திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே 500க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள், தமிழக அரசு வழங்கும் மாதாந்திர உதவித்தொகையை ரூ.1500-லிருந்து ரூ.6000 ஆக உயர்த்தக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆந்திர அரசு வழங்குவதைப் போல் உதவித்தொகை வழங்க வேண்டும் என வலியுறுத்தி, சாலையில் படுத்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால்
போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காவல்துறையினர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களைக் கைது செய்தனர்.