திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது, மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் ஸ்ரீசரவணன் உடன் இருந்தார். ஆட்சியர் நோயாளிகளிடம் குறைகள் ஏதும் உள்ளதா என்று கேட்டறிந்தார். இந்த நிகழ்வில் துறை சார்ந்த அதிகாரிகளும் உடனிருந்தனர்.