தமிழக சுகாதாரத்துறை கண்டித்து மருத்துவர்கள் ஆர்ப்பாட்டம்

0பார்த்தது
திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வாயில் முன்பு தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக அரசு பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவர் பணியிடங்களில் ஆட்குறைப்பு செய்யும் நடவடிக்கையை உடனடியாக கைவிட வேண்டும் என்றும், புதிய மருத்துவமனைகள் உருவாக்கப்பட்டால் அதற்குரிய மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் பணியிடங்கள் உருவாக்கப்பட்ட பின்னரே அவை தொடங்கப்பட வேண்டும் என்றும் சங்கம் வலியுறுத்தியுள்ளது. கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்காவிட்டால் அடுத்த கட்ட போராட்ட நடவடிக்கைக்கு தள்ளப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசு மருத்துவர்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் டாக்டர் சீனிவாசன் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கினார்.

தொடர்புடைய செய்தி