திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் திண்டுக்கல் சீனிவாசன் மீண்டும் போட்டியிடுகிறார். அவர் பேகம்பூர், முகமதியாபுரம் பகுதிகளில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். இந்தநிலையில், சீனிவாசன் குறித்து பேசிய செந்தில்குமார், "எடப்பாடி பெத்த புள்ளைக்கு நீங்கள் பெயர் வைக்க அசிங்கமாக இல்லை. வெட்கம் சூடு, சொரணை இல்லையா?" என்று கடுமையாக விமர்சித்தார். அதிமுக ஆட்சியில் 10 ஆண்டுகளில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை தெரிந்து கொண்டு பேச வேண்டும் என்றும் சீனிவாசன் பிரச்சாரம் செய்தார்.