திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் இருந்த நடைபாதை ஆக்கிரமிப்புகளை, நீதிமன்ற உத்தரவின் பேரில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மாநகராட்சி அதிகாரிகள் இன்று இடித்து அகற்றினர். இந்த நடவடிக்கையின் போது, குடியிருப்பு வாசிகள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.