இரண்டாம் நிலை காவலருக்கான தேர்வு

4பார்த்தது
திண்டுக்கல் மாவட்டத்தில் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் நடத்தும் 2025-ம் ஆண்டிற்கான இரண்டாம் நிலை காவலர், சிறை காவலர் மற்றும் தீயணைப்பாளர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு இன்று (09.11.2025) தமிழ்நாடு குடிமை பொருள் குற்றப்புலனாய் துறை காவல்துறை தலைவர் ரூபேஷ் குமார் மீனா மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் தலைமையில் நடைபெற்று வருகிறது. நத்தம் NPR கல்லூரி, SSM கல்லூரி, PSNA கல்லூரி மற்றும் GTN கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நடைபெறும் இத்தேர்வில் 5826 ஆண் மற்றும் 1650 பெண் என மொத்தம் 7476 போட்டித் தேர்வாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். தேர்வு மையங்களில் 693 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் தேர்வு மையங்களை நேரில் பார்வையிட்டார்.

தொடர்புடைய செய்தி