நடிகர் சூர்யா நடித்த கருப்பு திரைப்படம் இன்று தமிழகம் முழுவதும் வெளியானது. இதையொட்டி திண்டுக்கல் தனியார் திரையரங்கு முன்பு ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், தாரை தப்பட்டை முழங்க ஆட்டம் பாட்டத்துடனும் கொண்டாடினர். இப்படத்தில் சூர்யா கருப்பு சட்டை அணிந்து நடித்திருப்பதை முன்னிட்டு, திரையரங்கிற்கு வந்த ரசிகர்களும் கருப்பு நிற சட்டை அணிந்து வந்து தங்களது உற்சாகத்தையும் அன்பையும் வெளிப்படுத்தினர்.