திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், வரும் 22.08.2025 அன்று காலை 10.30 மணிக்கு விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சரவணன் தலைமையில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில், விவசாய தொழில்நுட்பங்கள், மானியத் திட்டங்கள், வேளாண் கருவிகள், கால்நடை பராமரிப்பு, பட்டுப்புழு வளர்ப்பு, கடன் வசதிகள் குறித்து விளக்கமளிக்கப்படும். விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை மனுவாக அளித்து பயனடையலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.