திண்டுக்கல் சோலைஹால் ரோட்டில் இயங்கி வந்த மீன் மார்க்கெட், புதுப்பிப்பு பணிகள் காரணமாக தற்காலிகமாக மேட்டுப்பட்டி சந்தைரோட்டில் உள்ள நவீன ஆட்டிறைச்சிக்கூடத்தில் செயல்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் சிரமத்திற்கு மன்னித்து ஆதரவு அளிக்குமாறு திண்டுக்கல் மாநகராட்சி நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. சனிக்கிழமை காலை 3 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 9 மணி முதல் 2 மணி வரையிலும் மொத்த வியாபாரம் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.