அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், "செங்கோட்டையன் மட்டம் தட்டி பேசி இருப்பதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும். தான்தோன்றி தனமாக பேசக்கூடாது. வயதைத் தவிர எந்த ஒரு விதத்திலும் நயினார் நாகேந்திரன் செங்கோட்டையனுக்கு குறைந்தவர் அல்ல" என்று பேட்டி அளித்துள்ளார். சசிகலா பொதுக்கூட்டம் மற்றும் கட்சி ஆரம்பிப்பது குறித்து கருத்து தெரிவிக்க அவர் மறுத்துவிட்டார். மேலும், கரூரில் உயிரிழந்தோருக்கு விஜய் கொடுத்த ரூ.5 லட்சம் போதுமானதல்ல என்றும், அவர் கோடி ரூபாய் கொடுத்திருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். தேமுதிக விரைவில் அதிமுகவுடன் இணைந்துவிடும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.