இலவச கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பரிசோதனை, தடுப்பூசி முகாம்

80பார்த்தது
ரோட்டரி கிளப் ஆப் திண்டுக்கல் குயின் சிட்டி மற்றும் திருநெல்வேலி காவேரி மருத்துவமனை இணைந்து இலவச கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பரிசோதனை மற்றும் தடுப்பூசி முகாம் நேருஜி நகர் ரவுண்டானா அருகே நடைபெற்றது. இம்முகாமை திண்டுக்கல் மாநகராட்சி மேயர் இளமதி ஜோதி பிரகாஷ் துவக்கி வைத்தார். ஆறுமுக பாண்டியன், தாமோதரன், செண்பகமூர்த்தி, சுந்தரராஜன், பூமிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கர்ப்பப்பை சம்பந்தமான மருத்துவர்களிடம் மருத்துவ ஆலோசனை பெற்றுச் சென்றனர்.