அம்மையநாயக்கனூர் அம்மாபட்டி செபஸ்தியார் கோவில் அருகே அரிவாளால் வெட்டிய வழக்கில் மனோஜ்குமார், மருதுபாண்டியன், அரவிந்த் ஆகியோரும், பட்டிவீரன்பட்டி பகுதியில் பட்டாகத்திகள் வைத்திருந்த கோகுலகிருஷ்ணனும், ரெட்டியார்சத்திரம், முத்தனம்பட்டி அருகே கஞ்சா வைத்திருந்த பாண்டியம்மாளும் கைது செய்யப்பட்டனர். இந்த 5 பேரின் குற்ற நடவடிக்கைகளை ஒடுக்கும் பொருட்டு, அவர்கள் அனைவரும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.