திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் விபத்துகளில் காயமடைந்த நோயாளிகளுக்கு முதலுதவி அளித்து மதுரைக்கு அனுப்பும் நிலை மாறி, இனி தலைக்காய சிகிச்சைக்கு தனிப்பிரிவு துவங்கப்பட்டுள்ளது. சிறப்பு மருத்துவர் நியமிக்கப்பட்டு, வென்டிலேட்டர் வசதியுடன் 6 படுக்கைகள் கொண்ட ICU அவசர வார்டும், 15 படுக்கைகள் கொண்ட உள்நோயாளி வார்டும் திறக்கப்பட்டுள்ளது.