திண்டுக்கல் யாகப்பன்பட்டியைச் சேர்ந்த சேசுராஜ் (41) மற்றும் அவரது மனைவி தீபிகா (35) ஆகியோர் நத்தம் ரோடு R.M.T.C. காலனி அருகே இருசக்கர வாகனத்தில் சென்றபோது மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக வேடபட்டியைச் சேர்ந்த அந்தோணி ஆரோக்கியசாமி (35) உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து கத்தி, அரிவாள், கார் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மாவட்ட எஸ்.பி. பிரதீப் உத்தரவின் பேரில் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் மற்றும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.