சட்டவிரோத மதுபான விற்பனை: ஒருவர் கைது

1பார்த்தது
சட்டவிரோத மதுபான விற்பனை: ஒருவர் கைது
திண்டுக்கல் அருகே, அரசு அனுமதியின்றி சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்ததாக அணைப்பட்டியைச் சேர்ந்த ரமேஷ்குமார் (37) என்பவரை பழனி பைபாஸ் முத்தழகுப்பட்டி பிரிவு அருகே ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த தாலுகா போலீஸார் கைது செய்தனர். அவரிடமிருந்து 26 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி