திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம்(டாம்கோ) கடன் திட்டங்கள் தொடர்பாக டாம்கோ தலைவர் பெர்னாண்டஸ் இரத்தின ராஜா, மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி தலைமையில் துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.
கடன் திட்டங்களின் கீழ் பயனடைய விரும்புபவர்கள், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், திண்டுக்கல் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி அல்லது அதன் கிளைகள், நகர கூட்டுறவு வங்கி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் ஆகிய இடங்களில் விண்ணப்பிக்கலாம்.
இந்த கடன்தொகை வழங்குவதற்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு தகுதியான பயனாளிகளை தேர்வு செய்து, கடன் வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம்(டாம்கோ) தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், கூட்டுறவு சங்கங்கள் இணைப்பதிவாளர் காந்திநாதன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் சுபாஷினி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் மாரி, துணை ஆட்சியர்(பயிற்சி) ராஜேஸ்வரி சுவி உட்பட துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.