திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரம் அடுத்த அப்பிநாயக்கன்பட்டி கிராமத்தில் உள்ள ஶ்ரீ வீரவிநாயகர், ஶ்ரீ காளியம்மன், ஶ்ரீ பகவதி அம்மன், ஶ்ரீ மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை சாமி சாட்டுதலுடன் தொடங்கியது. செவ்வாய்க்கிழமை அம்மன் கரகம் ஜோடிக்கப்பட்டு, அதிர்வேட்டுக்கள், வானவேடிக்கை, மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக கோவிலுக்கு அழைத்துவரப்பட்டது. புதன்கிழமை கிடைவெட்டி பொங்கல் மற்றும் மாவிளக்கு போடும் நிகழ்ச்சியும், வியாழக்கிழமை மஞ்சள் நீராட்டு விழாவும் நடைபெற்றது. இன்று அம்மன் கங்கை செல்லும் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.