திண்டுக்கல் ரயில் நிலையத்தில் மஹால் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறும்போது பரங்கிப்பேட்டையைச் சேர்ந்த ஜெய்னுலாப்தீன் என்பவர் தனது நகைப்பை தவறவிட்டுள்ளார். தகவலறிந்த ஆய்வாளர் வீரம்மாள் தலைமையிலான ரயில்வே போலீசார் தேடுதல் நடத்தி, மோதிரம், கைச்செயின், தோடு உள்ளிட்ட 28.5 கிராம் தங்க நகைகள் இருந்த பையை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தனர்.