திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே நர்சிங் கல்லூரி மாணவி புவனேஸ்வரி, தனது ஆண் நண்பரான நந்தகுமார் காரில் கல்லூரியில் இறக்கிவிடுவதற்காக வேகமாக அழைத்து சென்றபோது விபத்து ஏற்பட்டது. இதில் கட்டுப்பாட்டை இழந்த கார் தலைக்குப்புற கவிழ்ந்ததில், புவனேஸ்வரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இருப்பினும், கார் ஓட்டிய நந்தகுமார் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.