திண்டுக்கல் மாவட்ட கால்பந்து கழகம் மற்றும் புனித மரியன்னை முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில், மதுரை அமெரிக்கன் கல்லூரி மேல்நிலைப்பள்ளி அணி, கோயம்புத்தூர் பயணியர் மில்ஸ் மேல்நிலைப்பள்ளி அணியை 2:0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி கோப்பையை வென்றது. திண்டுக்கல் புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளி அணி மூன்றாம் இடத்தையும், சேலம் கிலேசி புரூக் அகடாமி அணி நான்காம் இடத்தையும் பிடித்தன. பரிசளிப்பு விழாவில் மாவட்ட கால்பந்து கழக தலைவர் சுந்தர்ராஜன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக கெரி இண்டேவ் விளையாட்டு தூதுவர்கள் சுகுமார், செல்வராஜ், ஷாலினி ஆகியோர் கோப்பைகளை வழங்கினர்.