திண்டுக்கல் நகர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் லிங்கபாண்டியன் தலைமையில், முகமதியாபுரம் அரசமரம் அருகே சட்டவிரோதமாக மதுபானம் விற்ற ஆல்ட்ரின்(40) என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடமிருந்து 14 மதுபான பாட்டில்கள், ரூ. 2000 பணம் மற்றும் டூவீலர் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.