விழுப்புரம் மாவட்டத்தில் "உங்களுடன் ஸ்டாலின்" திட்டத்தின் கீழ் 10,000 முகாம்கள் நடத்தப்பட்டு, 1.80 லட்சம் புதிய பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் வழங்கினார். தொடர்ந்து திண்டுக்கல், பி. எஸ். என். ஏ மஹாலில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி தலைமையில், மாவட்ட ஆட்சியர் சரவணன் முன்னிலையில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ. பி. செந்தில்குமார், மாநகராட்சி மேயர் இளமதி ஜோதி பிரகாஷ், துணை மேயர் ராஜப்பா, அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.