தமிழக அரசு, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ. 3000 ரொக்கம் வழங்கும் திட்டத்தை 08.01.2026 அன்று தொடங்கியது. இதன் தொடர்ச்சியாக, இன்று (10.01.2026) பழனி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார், சீலப்பாடி ஊராட்சி மகாலட்சுமி நகர் நியாயவிலை கடையில் அட்டைதாரர்களுக்கு இந்த பரிசுத் தொகுப்பையும் ரொக்கத்தையும் வழங்கினார்.