திண்டுக்கல் மாநகராட்சி 23-வது வார்டு ஆர். வி. நகர் மற்றும் 11-வது வார்டு காமராஜபுரம் பகுதி மக்களுக்கு இன்று இலவச இ-பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற பழனி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார், பயனாளிகளுக்குப் பட்டாக்களை வழங்கினார். திண்டுக்கல் மாநகராட்சி மேயர், துணை மேயர் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.