தே. மு. தி. க. நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம்

0பார்த்தது
தே. மு. தி. க. நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம்
திண்டுக்கல் மாநகர் மாவட்ட தே.மு.தி.க. சார்பில் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டத்தில், பொதுச்செயலாளர் பிரேமலதாவை திண்டுக்கல்லில் வரவேற்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. அவைத்தலைவர் முகமது யூசுப் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் மாதவன் சிறப்புரையாற்றினார். இளைஞரணி செயலாளர் பவுன்ராஜ் வரவேற்புரை ஆற்றினார். சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள், ஒன்றிய செயலாளர்கள், மகளிர் அணி மற்றும் சார்பு அணி நிர்வாகிகள், ஒன்றிய, பேரூர், கிளை நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். கிழக்கு ஒன்றிய செயலாளர் குழந்தை நன்றி கூறினார்.

தொடர்புடைய செய்தி