திண்டுக்கல்லில் எஸ்டிபிஐ மாவட்ட பொருளாளர் வீட்டில் என்ஐஏ சோதனை

1096பார்த்தது
மதுரை ராமலிங்கம் கொலை வழக்கு மற்றும் தடை செய்யப்பட்ட இயக்கங்களுடன் தொடர்பு இருப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில், திண்டுக்கல் பேகம்பூர் ஜின்னா நகரில் வசிக்கும் எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட பொருளாளர் ஷேக் அப்துல்லா வீட்டில் தேசிய புலனாய்வு முகமை (NIA) அதிகாரிகள் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினர். இரண்டரை மணி நேர சோதனைக்குப் பிறகு, ஷேக் அப்துல்லா மற்றும் அவரது மனைவியின் செல்போன்கள், கட்சி அடையாள அட்டை ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், வேடசந்தூர், ஒட்டன்சத்திரம், கொடைக்கானல் உள்ளிட்ட 8 இடங்களில் இதேபோன்ற சோதனைகள் நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி